6 மாத சிறை தண்டனை தீர்ப்பு: இயக்குனர் லிங்குசாமி விளக்கம்!

செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை என நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து இயக்குனர் லிங்குசாமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்னைப் பற்றிய செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல்ஸ் மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனங்கள் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கில் மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை உடனடியாக மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடிப்பில் ’எண்ணி ஏழு நாள்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதாக லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி காப்பீட்டு நிறுவனத்திடம் ஒரு கோடியே 3 லட்சம் கடன் பெற்றது. இந்த தொகையை திருப்பி செலுத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடனை திரும்ப செலுத்த வேண்டும் என நீதிமன்றம் லிங்குசாமிக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து லிங்குசாமி தரப்பில் ரூபாய் ஒரு கோடியே 3 லட்சத்து காசோலை தரப்பட்ட நிலையில் இந்த காசோலை வங்கியில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டதாக செக் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆழ்வார்பேட்டை கமல் வீடு அருகே விபத்து:  நூலிழையில் உயிர் தப்பித்த தமிழ் நடிகர்!

கமல்ஹாசனின் அலுவலகம் இருக்கும் ஆழ்வார்பேட்டை அருகே விபத்து ஒன்று நேரிட்டதாகவும் அந்த விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்த தாகவும் தமிழ் நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் 'ஜெயிலர்' படப்பிடிப்பில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது என

விஜய்யின் 'வாரிசு' படத்தில் லேட்டஸ்ட்டாக இணைந்த பிக்பாஸ் தமிழ் பிரபலம்: வீடியோ வைரல்!

 தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர்  இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

'நானே வருவேன்' தனுஷின் இரண்டு செம லுக்: கலைப்புலி எஸ்.தாணு வெளியீடு!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வருவது தெரிந்ததே.

சென்னை, மதுரை, கோவை என திடீர் சுற்றுப்பயணம் செய்யும் நடிகர் விக்ரம்: ஏன் தெரியுமா?

சென்னை, மதுரை, கோவை உள்பட பல பகுதிகளுக்கு திடீரென நடிகர் விக்ரம் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.