'வாரிசு' படத்திற்கு சிக்கல் வரக்கூடாது, வந்தால்... லிங்குசாமி ஆவேசம்!

விஜய்யின் ’வாரிசு’ திரைப்படத்திற்கு சிக்கல் வரக்கூடாது என்றும் அப்படி வந்தால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதற்கான தீர்வைக் கொண்டு வருவோம் என்றும் எச்சரிக்கை விடும் வகையில் இயக்குநர் லிங்குசாமி ஆவேசமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவான திரைப்படம் ’வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் பொங்கல் தினத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாக இருப்பதால் ’வாரிசு’ திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என தெலுங்கு திரையுலகை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ’வாரிசு’ திரைப்படத்திற்கு பிரச்சனை செய்யக்கூடாது என ஏற்கனவே சீமான் கண்டன அறிக்கை விட்டிருந்த நிலையில் தற்போது இயக்குனர் லிங்குசாமி இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ’வாரிசு’  படத்திற்கு திரையரங்குகள் தரமாட்டோம் என்று கூறினால் அது வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு பிரச்சனையை உருவாக்கும் என்றும் ’வாரிசு’ படத்திற்கு முன்பும் பின்பும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் என்றும் கூறினார்.

தமிழ், தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் இதற்கு சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என்றும் இரண்டு மொழி படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ’வாரிசு’ படத்தை குறுகிய மனப்பான்மையுடன் யாரும் பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ’வாரிசு’  படத்திற்கு பிரச்சனை சிக்கல் ஏதும் வரக்கூடாது என்றும் அப்படி வந்தால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதற்கான தீர்வைக் கொண்டு வருவோம் என்றும் இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

More News

70 வயதில் கபடி களத்தில் இறங்கும் ராஜ்கிரண்: 'பட்டத்து அரசன்' டிரைலர்

70 வயது கபடி வீரராக நடிகர் ராஜ்கிரண் நடித்துள்ள பட்டத்து இளவரசன் என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லைகா: ரசிகர்கள் செம குஷி!

அஜித் படத்தின் முக்கிய அறிவிப்பை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அருண் விஜய் பிறந்த நாளில் வெளியான சூப்பர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்:  இணையத்தில் வைரல்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண்விஜய் நடித்து வரும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

எனது மகள் சினிமாவில் நடிக்கின்றாரா? நடிகை ரோஜா விளக்கம்

நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்தி குறித்து நடிகை ரோஜா விளக்கமளித்துள்ளார்.

சன் டிவி 'ரோஜா' சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ரோஜா' சீரியலில் நடித்த நடிகை ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.