'ஆரம்பிக்கலாமா' முதல் 'முடிச்சிரலாமா' வரை.. லோகேஷ் பிறந்த நாள் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அவர் இயக்கிய முதல் படமான "மாநகரம்" படத்திலிருந்து, தற்போது இயக்கி வரும் "கூலி" படத்தின் காட்சிகள் வரை சூப்பராக எடிட் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, "விக்ரம்" படத்தில் "ஆரம்பிக்கலாமா?" என்ற கமல்ஹாசனின் வசனத்துடன் தொடங்கும் இந்த வீடியோ, "கூலி" படத்தில் ரஜினிகாந்த் பேசும் "முடிச்சிடலாமா?" என்ற வசனத்துடன் முடிகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 2017ஆம் ஆண்டு "மாநகரம்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு, கார்த்தி நடித்த "கைதி", விஜய் நடித்த "மாஸ்டர்", கமல்ஹாசன் நடித்த "விக்ரம்", விஜய் நடித்த "லியோ" ஆகிய ஐந்து படங்களை இதுவரை இயக்கியுள்ளார். இவை ஐந்தும் சூப்பர் ஹிட் ஆன படங்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "கூலி" படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Wishing the super talented filmmaker who redefined modern cinema, @Dir_Lokesh a very happy birthday!#HBDLokeshKanagaraj #HappyBirthdayLokeshKanagaraj #HBDLoki pic.twitter.com/5N7bECOZYG
— Sun Pictures (@sunpictures) March 14, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com