தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ஒருவருட கொண்டாட்டம்: லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சூப்பர் ஸ்டில்!

  • IndiaGlitz, [Thursday,January 13 2022]

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் இந்த படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவு பெறுகிறது.

‘மாஸ்டர்’ படத்தின் ஒரு வருட நிறைவு விழா கொண்டாட்டத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வரும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘மாஸ்டர்’ படத்தின் காட்சியை தளபதி விஜய்க்கு அவர் விளக்குவது போன்று இருக்கும் இந்த மாஸ் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் போது திரையரங்குகள் பல மாதங்களாக முடங்கிக் கிடந்த நிலையில் திரையரங்குகளுக்கு வருவதற்கே ரசிகர்கள் அச்சமடைந்த நிலையில் ரசிகர்களின் அச்சத்தை போக்கி திரையரங்கு உரிமையாளர்களுக்கு புத்துயிர் கொடுத்த படம் தான் ‘மாஸ்டர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு வருட ‘மாஸ்டர்’ கொண்டாட்டத்தில் நானும் கலந்து கொள்கிறேன் என்றும் விஜய், விஜய் சேதுபதி, லலித்குமார் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More News

போனிகபூர் தயாரித்த சூப்பர்ஹிட் படங்கள்: அந்த வரிசையில் இணையுமா அஜித்தின் 'வலிமை?

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவான 'வலிமை' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் போனிகபூர் தயாரித்த சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன என்பது

27 வருடங்களுக்கு முன் 'பாட்ஷா' படம் பார்த்த அனுபவம்: இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் நெகிழ்ச்சியான பதிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' திரைப்படம் வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தனது பள்ளி காலத்தில் 'பாட்ஷா' படம் பார்த்த மலரும் நினைவுகளை 'கண்ணும் கண்ணும்

மன்னிப்பு கேட்ட பின்னரும் வழக்குப்பதிவு: சிக்கலில் சித்தார்த்?

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சித்தார்த் மன்னிப்பு கேட்ட பின்னரும் அவர் மீது ஹைதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது

வேறு ஒரு அம்மாவிடம் இருந்து எனக்கு கிடைத்த அக்கா: அதிதி ஷங்கர் குறித்து 'பிகில்' நடிகை!

வேற ஒரு அம்மாவிடம் இருந்து எனக்கு கிடைத்த அக்காதான் அதிதி ஷங்கர் என 'பிகில்' படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ஷங்கரின் மகள் குறித்து கூறியிருப்பது பெரும்

'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்': சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட லைகா!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் 'நாய்சேகர் ரிட்டன்ஸ்' என்ற திரைப்படத்தில் மீண்டும் வைகைப்புயல் வடிவேலு ரீ-என்ட்ரி ஆகிறார் என்பதும் இந்த படத்தின் பாடல் கம்போசிங் பணிகளுக்காக சமீபத்தில்