close
Choose your channels

நாடக காதலை அடுத்து இயக்குனர் மோகன் ஜி எடுத்துள்ள அடுத்த பிரச்சனை!

Tuesday, August 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடகக் காதலை மையமாக வைத்து இயக்கிய மோகன்ஜி ’திரௌபதி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது மதம் மாறி அரசியல் செய்வது குறித்த பிரச்சனையை மையமாக வைத்து திரைப்படத்தை அவர் எடுத்துள்ளார். அந்த திரைப்படம் தான் ’ருத்ரதாண்டவம்’. இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.

மதம் மாறி இன்னொரு மதத்தை கடுமையாக விமர்சனம் செய்யும் நபர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் இந்த படத்தை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது. ருத்ரன் என்ற காவல்துறை அதிகாரி கேரக்டரில் ’திரௌபதி’ படத்தில் ஹீரோவாக நடித்த ரிச்சர்ட் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராதாரவி வழக்கறிஞர் கேரக்டரிலும் அதிரடி வில்லனாக கௌதம் மேனனும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ’மதம் மாறிவிட்டால் ஜாதியை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வு வந்து விட்டால் யாரும் மதம் மாற மாட்டார்கள், இங்கே மதத்தை விட ஜாதிக்கு தான் வேர் அதிகம்’ என்ற வசனமும் ’நாம கும்புடுற சாமியை பிசாசு என்று சொல்லிவிட்டு சுத்துற கும்பலை எல்லாம் நாட்டுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விடலாம்’ என்ற வசனமும் நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாரும் சொல்லத் துணியாத கதைக்களத்தை இயக்குனர் மோகன் துணிந்து எடுத்துள்ளதாக இந்த டிரைலருக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.