முழங்காலில் மண்டியிட்டு உங்கள் கால்களில் பூக்களை வழங்குகிறேன்: மிஷ்கின்

  • IndiaGlitz, [Saturday,September 26 2020]

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரை உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். குறிப்பாக அவரது மறைவால் இசைத்துறையில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் எஸ்பிபி குறித்து அவருடன் பழகியவர்கள் மட்டுமின்றி பழகாதவர்களும் கூட தங்களது இரங்கலையும் அவருடைய பெருமைகளையும் சமூகவலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்பிபி குறித்து பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது:

நம் நாட்டிற்கும் நமது சினிமா சகோதரத்துவத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் இல்லாமல் நாம் வீரக் குரல் இல்லாமல் இருக்கிறோம். அவரது ரசிகர்கள் அனைவரையும் போலவே நான் உடைந்துவிட்டேன். அன்பான எஸ்.பி.பி ஐயா, நான் முழங்காலில் மண்டியிட்டு உங்கள் கால்களில் பூக்களை வழங்குகிறேன்.

More News

எஸ்பிபியுடன் விடிய விடிய பேசினேன்: நடிகர் செந்திலின் மலரும் நினைவுகள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவரகள் நேற்று காலமான நிலையில் அவருடன் பழகிய நாட்களை திரையுலக பிரமுகர்கள் பகிர்ந்து கொண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி!

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு புரோகிதர்கள் இறுதிச்சடங்குகளை சற்றுமுன் தொடங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது. 

கமல்ஹாசன் பட பாடலை உதாரணமாக கூறி எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்த சச்சின்!

பிரபல பின்னர் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமண்யம் அவர்களின் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

மியாண்டட் சிக்ஸ் அடித்த மேட்ச், உலகக்கோப்பை இறுதி போட்டி: எஸ்பிபியின் கிரிக்கெட் நினைவலைகள்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் ஒரு மிகச் சிறந்த பாடகர், இசையமைப்பாளர் மட்டுமின்றி தீவிரமான, வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர் என்பது பலரும் அறிந்த உண்மை

எஸ்பிபிக்கு அரசு மரியாதை: பிரதமர், முதல்வருக்கு பாரதிராஜா நன்றி!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் நம்மை தவிக்கவிட்டு மறைந்துவிட்ட நிலையில் அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்