இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் முதல் படம்!

  • IndiaGlitz, [Tuesday,June 28 2022]

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இசையமைக்கும் முதல் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர்.

மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த S.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் செய்கிறார்கள்.

தமிழின் மிக முக்கியமான இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக “டெவில்” மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மிஷ்கின் அவர்கள் இதற்கு முன் பல பாடல்கள் எழுதியுள்ளார், பல பாடல்கள் பாடியுள்ளார்.

அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில் அவரது பங்கு முக்கியமானது. தற்போது டெவில் திரைப்படத்திற்கு முத்தான நான்கு பாடல்கள் கொடுத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

More News

விஜய்யின் 'வாரிசு' படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த தமன்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் தமன் தனது சமூக

இது உண்மையில்லை, ஆனா கேட்கவும் பாக்கவும் நல்லாயிருக்கு: பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ!

'இது உண்மை இல்லை ஆனால் கேட்கவும் பார்க்கவும் நல்லா இருக்கு' என பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

பிரபல தமிழ் ஹீரோவுக்கு திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

பிரபல தமிழ் ஹீரோவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவருமான ஹரிஷ் கல்யாண் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஹனிமூனில் இருந்து திரும்பியதும் உதயநிதிக்கு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்: இதுதான் காரணம்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை சமீபத்தில் திருமணம் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன், தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்று இருந்தார் என்பதும் சமீபத்தில் அவர் ஹனிமூனை

நாடக நடிகர் 'பூ' ராமு காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

நாடக நடிகரும் சசி இயக்கத்தில் உருவான 'பூ' உள்பட ஒருசில படங்களில் நடித்தவருமான ராமு நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் காலமானதாக