மீண்டும் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் மிஷ்கின்

  • IndiaGlitz, [Thursday,March 01 2018]

இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் ஜீவா நடித்த சூப்பர் ஹீரோ கதையான 'முகமூடி' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் மிஷ்கின் மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோ கதையை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த முறை அவர் கையில் எடுப்பது சோஷியல் நெட்வொர்க். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவை கலந்து சொல்லும் சூப்பர் ஹிரோ கதை தான் மிஷ்கின் இயக்கும் அடுத்த படம். மேலும் இந்த படத்தை அவர் 3D டெக்னாலஜியில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'முகமூடி' படத்தில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ள மிஷ்கின், இந்த படத்தை வெற்றிபடமாகக் வேண்டும் என்பதற்காக திரைக்கதையில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இந்த படம் இளைஞர்களை கவரும்  வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

'தல 59' பட இயக்குனர் யார்? பரபரப்பான தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தொடங்கவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பூரண மதுவிலக்கு குறித்து கமல்ஹாசனின் வித்தியாசமான கருத்து

தற்போதைய தமிழக அரசின் முக்கிய வருமானம் டாஸ்மாக் தான். மதுவை ஒழிப்போம், பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கொள்கையாக வைத்திருந்தாலும்

கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் இன்றி இருந்த நிலையில் அவரது உடல் தற்போது நல்ல முறையில் தேறி வருவதாகவும், அவருக்கு பேச்சுப்பயிற்சி கொடுக்கப்பட்டு

கமல் கட்சியுடன் கூட்டணியா? சரத்குமாரின் அதிரடி பதில்

'கமல்ஹாசனுடன் நான் ஏன் கூட்டணி அமைக்க வேண்டும். தேவையென்றால் அவர்தான் என்னுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என்று சரத்குமார் கூறினார்.

நீதிக்கு நீதி வேண்டும்: மத்திய மந்திரிக்கு எதிராக கமல் கட்சியின் அறிக்கை

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்சியில் உறுப்பினர் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது