மலையாளத்தில் அறிமுகமாகும் மிஷ்கின்.. ஹீரோ யார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரையுலகில் 'சித்திரம் பேசுதடி' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின், அதன் பின்னர் தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பல்வேறு அவதாரங்களில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக அவர் மலையாளத் துறையில் நடிகராக அறிமுகமாக இருப்பதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல மலையாள இயக்குனர் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ளார். இது குறித்து அறிவிப்பு வெளியான நிலையில், இது அவரது 40வது படம் என்றும், இந்த படத்திற்கு 'ஐ அம் கேம்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஒரு முக்கிய வேடத்தில் தான் மிஷ்கின் நடிக்க மிஷ்கின் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து இயக்குனர் ஹிதாயத் தனது சமூக வலைத்தளத்தில், "பன்முக தன்மை கொண்ட அற்புதமான திறமை உடைய மிஷ்கின் அவர்களை 'ஐ அம் கேம்' படத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். வரவிருக்கும் ஒரு அற்புதமான விளையாட்டுக்கு அனைவரும் தயாராக இருங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், இயக்குனர் மிஷ்கின் தனது சமூக வலைத்தளத்தில், "நம்ப முடியாத திறமையான குழுவில் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
We are absolutely thrilled to welcome the multifaceted, incredibly talented Mysskin Sir to the #ImGame team! Get ready for an exciting game ahead! 🎰
— Wayfarer Films (@DQsWayfarerFilm) May 2, 2025
#DulquerSalmaan #NahasHidhayath #WayfarerFilms #dQ40 #ImGame pic.twitter.com/Le6T6mzUUb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments