சமந்தா-நாக சைதன்யாவை இணைத்து வைக்க பெண் இயக்குனர் முயற்சியா?

சமந்தா மற்றும் நாக சைதன்யாவை மீண்டும் இணைத்து வைக்க பெண் இயக்குனர் ஒருவர் முயற்சிப்பதாக கூறப்படுவதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவர் நாகசைதன்யாவை பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சமந்தா மற்றும் நாக சைதன்யா ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் இருவரும் மீண்டும் இணைந்து வாழவேண்டும் என்ற தங்களது விருப்பத்தை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளிவந்த ’ஓ பேபி’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நந்தினி ரெட்டி தனது அடுத்த படத்திற்காக சமந்தா மற்றும் நாக சைதன்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். சமந்தா நாகசைதன்யா பிரிவுக்கு முன்னரே இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த படத்தை தொடங்குவதற்கான முயற்சிகளில் நந்தினி ரெட்டி உள்ளார்.

தற்போதைய நிலையில் இந்த படத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யாவை நடிக்க வைக்க அவர் முயற்சி செய்வார் என்றும், ஒருவேளை இருவரும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் யாராவது ஒருவரை மாற்ற அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

'அஜித் 61' படத்தில் இணையும் இரண்டு முன்னணி ஹீரோக்கள்!!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படமான 'அஜித் 61'  படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது.

'மாநாடு 2' என எஸ்.ஜே.சூர்யா வர்ணித்த விஷால் படம்: லேட்டஸ்ட் அப்டேட்!

 சிம்பு நடித்த 'மாநாடு' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த எஸ் ஜே சூர்யா அடுத்து விஷாலுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் என்றும் அந்த படத்தை 'மாநாடு 2'  என்று சொல்லலாம்

விவாகரத்தான மனைவி மீது இசையமைப்பாளர் டி இமான் வழக்கு: என்ன காரணம்?

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை விவாரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில்

கவினுடன் பிரேக்-அப் ஆனது உண்மையா? முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

 பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் உருகி உருகி காதலித்த கவின் மற்றும் லாஸ்யா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நேரெதிராக ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.

'பீஸ்ட்'  டிரைலரில் உள்ள முகமூடி போட்ட வில்லன் யார்? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'   திரைப்படத்தில் முகமூடி போட்ட வில்லன் யார் என்ற கேள்வி தற்போது பரபரப்பாக சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.