close
Choose your channels

குடும்பத்துடன் துபாய் சென்ற நெல்சன்: உடன் சென்ற நடிகை யார் தெரியுமா?

Thursday, May 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் நெல்சன் தனது குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவருடன் பிரபல நடிகை, பிரபல நடிகர் மற்றும் சிலரும் சென்றுள்ளனர்.

’கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன், ‘டாக்டர்’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்ற 100 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தை இயக்கினார். அதன்பின் தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தை இயக்கிய நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 169’ படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நெல்சன் தனது மனைவி, மகனுடன் துபாய் சுற்றுலா சென்றுள்ளார். அவருடன் நடிகர் கவின், நடிகை பிரியங்கா மோகன் உள்பட ஒருசிலர் சென்று உள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிகா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.