'தலைவர் 169' படம் தாமதமாகிறதா? நெல்சன் விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் ,அனிருத் இசையில் உருவாகயிருக்கும் திரைப்படம் ’தலைவர் 169’. இந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் மே அல்லது ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் அதிகம் இருப்பதாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அமெரிக்கா செல்ல இருப்பதாலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்திற்குப் பின்னரே தொடங்கும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். இதனை அடுத்து ’தலைவர் 169’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தொடங்கும் முன் இந்த படத்தில் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்தியா எங்களுக்கு அண்ணன்… முக்கிய வீரரின் உருக்கத்திற்கு என்ன காரணம்?

இலங்கை கடுமையான பொருளாதாரப் பாதிப்பை சந்தித்து வருகிறது.

பிரபலத்தின் படத்திற்காக இணைந்த மணிரத்னம் - எஸ்.எஸ்.ராஜமெளலி!

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ஒரு பிரபலத்திற்காக மணிரத்னம் மற்றும் எஸ்.எஸ்.ராஜமெளலி இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தனுஷின் அடுத்த பட டைட்டில் இதுவா? பீரியட் படம் எனவும் தகவல்

தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்து உள்ள நிலையில் இந்த படம்  கடந்த 1930ல் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் கொண்டது என்றும் கூறப்படுகிறது .

நாகார்ஜூனா குடும்பத்தின் முக்கிய நபருக்கு வாழ்த்து கூறிய சமந்தா: ஏன் தெரியுமா?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா திடீரென நாகார்ஜூனா குடும்பத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ்? கார்த்திக் சுப்புராஜ் திட்டம்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன