close
Choose your channels

சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகும் இயக்குனர் பாண்டிராஜ் வாரிசு!

Tuesday, August 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் பிரபலங்களின் வாரிசுகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வருவது வழக்கமான ஒன்றே. நடிகர்கள் விஜய் சேதுபதியின் மகன், ஜெயம் ரவியின் மகன் உள்பட பல நட்சத்திரங்களின் வாரிசுகள் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் மகனும் அவர் இயக்கி வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகம் ஆகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியானது என்பது தெரிந்ததே. இதில் செகண்ட் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அருகில் ஒரு சிறுவன் இருப்பதை அனைவரும் கவனித்திருப்பீர்கள். அந்த சிறுவன்தான் இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் மகன் என்பது தெரியவந்துள்ளது.

இதே போஸ்டரில் இன்னும் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் உள்ளனர். அவர்கள் யார் என்பது விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.