உலக அளவுக்கு செல்லும் 'ஒத்த செருப்பு' திரைப்படம்: பார்த்திபன் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,May 18 2021]

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘ஒத்த செருப்பு’ என்ற திரைப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இருப்பார் என்பதும் அது மட்டுமன்றி அவரே இந்த படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு திரைப்படத்தில் ஒருவர் மட்டுமே நடித்து அந்த படத்தை தயாரித்து இயக்கியது என்பது உலக அளவில் இதுதான் முதல் முறை என்று கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு சென்று வந்தது என்பதும் தேசிய விருது பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தை இந்திய அளவிலும் உலக அளவிலும் எடுத்துச்செல்ல பார்த்திபன் முடிவு செய்துள்ளார். இதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

என் தமிழ் அழகு.என்னை கூடுதல் அழகாக்குவதும் தமிழ் தட்டுத்தடுமாறி ஆங்கிலமும்,தப்பித்தவறி மற்ற மொழிகளும் பேச முயன்றதுண்டு.ஹிந்தி முஜே நஹி மாலும் ஹே! But ‘ஒத்த செருப்பு’ ஹிந்தியும் விரைவில் ஆங்கிலமும் பேச இருப்பதால்,இரு மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒரு இரு மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒரு Personal Assistant (பால் பாகுபாடில்லை) தேவைப்படுகிறார்.ஈடுபாட்டுடன் பணிப்புரிய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலால் என அறிவித்திருந்தார்.

பார்த்திபனின் இந்த அறிவிப்பை அடுத்து பலரும் அவரை தொடர்பு கொண்ட நிலையில் சற்றுமுன் அவர் கூறியிருப்பதாவது: P A வேணும்னு கேட்டால், rupeeயே வேணாம்,வேலை செய்றேன்னு நிறைய விண்ணப்பங்கள்.அன்புக்கு நன்றி. வந்தவை அனைத்தும் சிறப்பாயினும் ஒன்றை தேர்ந்தெடுப்பது என் இயலாமை.மன்னிக்க. இன்னும் 3 தினங்களுக்குள் வரும் விண்ணப்பங்களில் தேர்வு செய்யப்படும். நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

ஞானதந்தையை இழந்து விட்டேன்: நடிகர் சிவகுமார் உருக்கம்!

பிரபல தமிழ் எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்கள் இன்று காலமானதை அடுத்து ஒரு ஞான தந்தையை நான் இழந்து விட்டேன் என நடிகர் சிவகுமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்

ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இன்றும் 33 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு இருந்தது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்த அதிமுக! எம்பி, எம்.எல்.ஏக்களின் ஒருமாத சம்பளமும் அளிப்பதாக அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாஅல் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக பலரும் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர்

சமந்தா அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது தமிழில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும்'காத்துவாக்குல ரெண்டு காதல்'

Blood Moon ஆகும் சந்திரன்… எப்போது? வெறும் கண்களால் பார்க்கலாமா?

சூரியன்-பூமி-சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய ஒளி நிலவில் படாது.