சொன்ன சொல்லை காப்பாற்றிய லாரன்ஸ்: என்ன செய்தார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,June 12 2022]

நடிகரும், நடன இயக்குனரும், இயக்குநருமான லாரன்ஸ் சொன்ன சொல்லை காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் வெளியானபோது அந்த படத்திற்கு பின் பார்வதி அம்மாளின் கதை இருப்பது பலருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து பார்வதி அம்மாள் சொந்த வீடுகூட இல்லாமல் கஷ்டப்படுவதை அறிந்த ராகவா லாரன்ஸ் அவருக்கு வீடு கட்டி தருவதாக நேரில் பார்வதி அம்மாளை சந்தித்து வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் தமிழக அரசு பார்வதி அம்மாளுக்கு இடம் ஒதுக்கி வீடு கட்டி தருவதாக அறிவித்ததையடுத்து பார்வதி அம்மாள் மற்றும் அவருடைய மகள் மற்றும் இரண்டு மகன்கள் ஆகியோர்களுக்கு வீடுகட்ட ஒதுக்கிய பணத்தை கொடுக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்தார்.

இந்த நிலையில் தற்போது பார்வதி அம்மாள் குடும்பத்தினரை தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வீடு கட்ட ஒதுக்கிய பணத்தை பார்வதியம்மாள், அவருடைய மகன்கள், மகள் ஆகியோர்களுக்கு பிரித்து வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

பேங்க் கொள்ளை மட்டுமல்ல, இன்னொரு டுவிஸ்ட்டும் இருக்கும்: 'ஏகே 61' படம் குறித்த தகவல்

அஜித் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் உருவாகிவரும் 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

கமல்ஹாசனை வீட்டுக்கு அழைத்து விருந்தளித்த பிரபலம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளதை அடுத்து திரை உலகப் பிரபலம் ஒருவர் கமல்ஹாசனை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்துள்ளார்.

அடடே, சிம்ரன் மகன் இளைஞராகிவிட்டாரா? வைரலாகும் புகைப்படங்கள்

கடந்த 90கள் மட்டும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த சிம்ரனின் மகன் தற்போது இளைஞர் ஆகி உள்ளது அவரது பிறந்த நாள் புகைப்படத்தில் இருந்து தெரிய வந்ததை

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பில் அஜித் குடும்பத்தினர்! வைரல் புகைப்படம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகள் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,

இயக்குனர் விக்னேஷ் சிவனின் தங்கையா இவர்? வைரல் புகைப்படம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் நேற்று முன்தினம் நடந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் அம்மா மற்றும் தங்கை புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில்