அவர் கிரிக்கெட்டுக்கும் மட்டும் 'தல' அல்ல: கமல், விக்ரம் பட இயக்குனர் கருத்து

  • IndiaGlitz, [Monday,April 29 2019]

கூல் கேப்டன், மேட்ச் ஃபினிஷர், சிறந்த கேப்டன்ஷிப், அதிரடி பேட்ஸ்மேன் உள்பட பல பெருமைக்கு சொந்தக்காரரான 'தல' தோனி, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியை கிட்டத்தட்ட தனி ஆளாக கரையேற்றி வருகிறார்.

அவருடன் ஒரே ஒரு போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என்பது கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்நாள் ஆசையாக கூட உள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் தல தோனியின் ரசிகர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'தூங்காவனம்' மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம். செல்வா, தல தோனியுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் சற்றுமுன் பதிவு செய்துள்ளார்.

ஒரு மிகப்பெரிய மனிதரின் அருகில் நின்று புகைப்படம் எடுத்ததை பெருமையாக கருதுவதாகவும், அவர் கிரிக்கெட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஒரு உதாரணமாக திகழ்பவர் என்றும் ராஜேஷ் எம்.செல்வா குறிப்பிட்டுள்ளார்.
 

More News

'அசுரன்' படம் குறித்து தனுஷின் முக்கிய அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது.

இந்த தேர்தல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: சச்சின் தெண்டுல்கர்

இந்தியாவில் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

மாமியாருடன் தகராறு: முகமது ஷமியின் மனைவி கைதால் பரபரப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரும், பஞ்சாப் அணியின் முக்கிய வீரருமான முகமது ஷமியின் மனைவி ஹசின் உத்தரபிரதேச மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மாணவிக்கு போட்டி போடும் 7 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்!

சைமன் நூராலி என்கிற 17 வயது மாணவி, உயர்கல்வி பயில 7   பல்கலைக்கழகங்களிலிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது.

முதல் முறையாக வெளியான குறளரசன் காதல் மனைவியுடன் இருக்கும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமைகளோடு, தனக்கென தனி அங்கீகாரத்தை பதித்தவர், டி.ராஜேந்தர்.