இயக்குனர் ராம் இயக்கிய 'பறந்து போ'.. நடிகர் சூரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான 'பறந்து போ' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி, ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் சூரி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் பாடலை வெளியிட்டுள்ளார். இந்த பாடலின் இறுதியில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரை உலகின் தரமான இயக்குனர்களில் ஒருவர் ராம் என்பதும், இவரது இயக்கத்தில் உருவான 'பறந்து போ' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், நடிகர் சூரி தனது சமூக வலைதள பக்கத்தில் 'Sunflower' என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளார். மூன்று நிமிடங்கள் கொண்ட இந்த பாடலில், அஞ்சலி உள்பட இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சந்தோஷ் தயாநிதி இசையில், விஜய் யேசுதாஸ் ஆகியோர் பாடிய இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
இந்நிலையில், இந்த படம் ஜூலை 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரேஸ் அந்தோணி, மாஸ்டர் மிதுன், ரயான், அஞ்சலி, விஜய் யேசுதாஸ், தியா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், இயக்குனர் ராம்-க்கு இன்னொரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் ராம் sirன் பறந்து போ திரைப்படத்தின் முதல் பாடல்.#Sunflower — Ram’s #ParanthuPo, sung by @iamvijayyesudas https://t.co/Xnp7m6Rfez @actorshiva #graceantony @yoursanjali @DhayaSandy @madhankarky @mynameisraahul @Romeopictures_ @thinkmusicindia @JioHotstar…
— Actor Soori (@sooriofficial) May 23, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com