உங்கம்மாவ என்ன சொல்லி தேத்துறது: பிரபல இயக்குனர் உருக்கம்
ஜிவி பிரகாஷ் நடித்த ’4ஜி’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் அருண் பிரசாத் என்பவர் நேற்று சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அருண்பிரசாத், முதல் படம் இயக்கி, அந்த படம் வெளிவருவதற்கு முன்னரே பரிதாபமாக பலியானது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்த நிலையில் மறைந்த இயக்குநர் அருண் பிரசாத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ’இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் தனது நண்பரின் மறைவை தாங்க முடியாமல் தனது சமூக வலைத்தள ஒரு பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
“நண்பா என்னை ஹீரோ மாதிரி எடுடா”ன்னு சொன்னியே... உன்னை அவ்ளோ ரசிச்சு நான் எடுத்த இந்த போட்டோவை உனக்கு அஞ்சலி போட்டோவா போட வெச்சியேடா நண்பா! டெய்லி எவ்ளோ பேசியிருப்போம். எத்தனை ஆசைகளை சொன்ன... உன்னோட கனவுகளைல்லாம் காத்துல போயிடுச்சே அய்யோ... என் வெற்றிய உன்னோட வெற்றியா கொண்டாடுற உன் இடத்தை யார்டா நிரப்புவா. உங்கம்மாவ என்ன சொல்லி தேத்துறது! போடா டேய்.