ஆர்.கே.நகர் தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கம்' ஆதரவு யாருக்கு? எஸ்.ஏ.சி பேட்டி

  • IndiaGlitz, [Saturday,March 25 2017]

இளையதளபதி விஜய்யின் 'விஜய் மக்கள் இயக்கம்' அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருவதால், இந்த இயக்கம் ஒவ்வொரு தேர்தலின்போதும் யாருக்கு ஆதரவு என்கிற நிலையை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி பேட்டி ஒன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த பேட்டியில் எஸ்.ஏ.சி கூறியதாவது: 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர விரும்பினேன். அதில் அதிக ஆர்வம் காட்டினேன். நடிகர் என்பதால் அரசியலில் புகழ் பெற முடியும், அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்தேன். காலப்போக்கில் அரசியல் சுத்தப்படுத்த முடியாத சாக்கடை என்பதை உணர்ந்தேன்.

தற்போது தமிழகத்தில் எப்படிப்பட்ட அரசியல் உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். இதுபோன்ற அரசியலை பார்த்தது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது மகன் அரசியலுக்கு வர நான் விருப்பப்படவில்லை. விஜய் அரசியலுக்கு வரமாட்டார்.

விஜய்யின் மக்கள் இயக்கம், அரசியலில் ஈடுபடாததால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது' இவ்வாறு எஸ்.ஏ.சி கூறினார்.

சமீபத்தில் இதே முடிவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினிகாந்த் இலங்கை செல்ல முக்கிய அரசியல் கட்சி தலைவர் எதிர்ப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக கட்டியிருக்கும் 150 வீடுகளை திறந்து வைக்க ரஜினிகாந்த் சம்மதித்துள்ளதாக வெளிவந்த செய்தியினை பார்த்தோம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சரத்குமார் கட்சி மனு தள்ளுபடி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ், தீபா மற்றும் சீமானின் நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்பட 100க்கும் மேற்பட்டோர் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர்

தீபா வேட்புமனு தள்ளுபடியா?

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தீபா நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதிகாசங்களில் ஒன்றாகிய மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக வள்ளியூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆதிநாத சுந்தரம் என்பவர் சமீபத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

கூடாரத்தை ஒரேயொரு அறிவிப்பில் காலி செய்த கருணாஸ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது.