close
Choose your channels

'காமன்மேன்' படத்தில் சசிகுமாரின் கேரக்டர் இதுதான்: இயக்குனர் சத்யசிவா தகவல்

Tuesday, January 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’காமன்மேன்’ என்றும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. சசிகுமாருடன் விக்ராந்த் நடிக்கும் இந்த படத்தில் ஹரிப்பிரியா நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் ஜிப்ரான் இசையில் உருவாகிவரும் இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

’காமன்மேன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை இயக்கி வரும் சத்யசிவா இந்தப் படத்தில் சசிக்குமாரின் கேரக்டர் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த படத்தில் சசிகுமார் இதுவரை நடித்திராத சவுண்ட் இன்ஜினியர் கேரக்டரில் நடித்து வருவதாகவும் இந்த கேரக்டர் அவருக்கு கச்சிதமாகப் பொருந்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் வரும் பிப்ரவரியில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.