வெளியே போகாதே, உயிரை போக்காதே: சீனுராமசாமியின் கொரோனா பாடல்

கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை பல திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமியின் பாடல் வரிகளில் என்.ஆர்.ரகுநாதனின் இசையில் செந்தில் தாஸ் குரலில் ஒரு கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளிவந்துள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த பாடல் வரிகளை தற்போது பார்ப்போம்.

உன்னை காக்கும் நேரமிது
உயிரை காக்கும் நேரமிது
உறவை காக்கும் நேரமிது உன்
நாட்டை காக்கும் நேரமிது

தனித்து இருப்பவனே மனிதன்
பிறரை காக்க நினைப்பவன் புனிதன்
வெளியே போகாதே, உயிரை போக்காதே,
தனியே இருப்பாயே, தலைமுறை காப்பாயே

முத்தம் வேண்டாம், பறக்கும் முத்தம் போதும்
கைகுலுக்க வேண்டாம், கையசைத்தாலே போதும்
கட்டியணைக்க வேண்டாம் யாரையும்
தொட்டு பேச வேண்டாம்
உரையாடல் பருக இரண்டு மீட்டர்
இடைவெளி தருக

சோப்பு நீரில் கை கழுவினால்
கொரோனாவுக்கு சமாதி கட்டலாம்
உயிர் கொல்லிக்கு கொள்ளி வைக்கலாம்
நம் உறவையே காக்கலாம்

வெளியே போகாதே, உயிரை போக்காதே,
தனியே இருப்பாயே, தலைமுறை காப்பாயே
வெளியே போகாதே, உயிரை போக்காதே,
தனியே இருப்பாயே, தலைமுறை காப்பாயே

More News

சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் தினம் அனுசரிப்பு!!! நாடுமுழுவதும் மௌன அஞ்சலி செலுத்திய மக்கள்!!!

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவிய முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது

கொரோனாவால் உயிரிழந்தவர்களை கணக்கில் காட்டாமலே கல்லறைத் தோட்டங்களில் புதைக்கப்படும் அவலம்!!!

கொரோனா பாதிப்பின் மையங்களாக ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன என்று சொல்லப்படும் அளவிற்கு பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

கொரோனா பரபரப்பிலும் கிளுகிளுப்பான வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா

ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம், உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரி எனப்வரை திருமணம் செய்து கொண்டார்.

கொரோனா வைரஸ் குறித்த ஜாக்கிசானின் விழிப்புணர்வு வீடியோ!

கொரோனா வைரஸ் அபாயம் குறித்து உலகம் முழுவதும் உள்ள திரை உலக பிரபலங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்

மதுவுக்கு பதில் சேவிங் லோஷனை குடித்த இருவர் பரிதாப பலி!

கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாப்பதை விட மதுவுக்கு அடிமையானவர்களை பாதுகாப்பது அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் போல் தெரிகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக