close
Choose your channels

ஜல்லிக்கட்டுக்கு மறுப்பு தெரிவித்த தேசிய விருது பெற்ற இயக்குனர்

Wednesday, December 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் திருநாள் நெருங்கி வரும் நிலையில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க திரையுலகினர் உள்பட பலர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் சீனுராமசாமியின் அடுத்த படம் 'ஜல்லிக்கட்டு' குறித்த கதையம்சம் கொண்டது என செய்திகள் வெளியாகி வருகிறது.

'தென்மேற்கு பருவக்காற்று', நீர்ப்பறவை' உள்பட பல படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசமி தற்போது விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் 'தர்மதுரை' என்ற படத்தை இயக்கி வருகிறார். தேனியை சுற்றியுள்ள கிராமத்து பகுதிகளை பின்னணியாக கொண்ட இந்த படம் ஜல்லிக்கட்டு குறித்த கதை என கூறப்பட்டது. ஆனால் இதற்கு இயக்குனர் சீனுராமசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கும் ஜல்லிக்கட்டுவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் இது முழுக்க முழுக்க முற்றிலும் வித்தியாசமான கதை என்றும் கூறியுள்ளார்.


விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவேதா, ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவியரசர் வைரமுத்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டுடியோ 9 புரடொக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.