இருக்கிற மரியாதையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்: கே.பாக்யராஜூக்கு செல்வமணி தரப்பு பதிலடி!

பிப்ரவரி 27ஆம் தேதி இயக்குனர் சங்க தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் கே பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணியும், செல்வமணி தலைமையிலான புது வசந்தம் என்ற அணியும் போட்டியிடுகின்றன.

சமீபத்தில் கே பாக்யராஜ் தனது அணியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசியபோது, செல்வமணி குறித்து கடுமையான விமர்சனம் வைத்தார். குறிப்பாக செல்வமணி இயக்கிய படங்களை எல்லாம் அவர்தான் இயக்கினாரா என்ற சந்தேகம் தனக்கு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் புது வசந்தம் அணியின் செல்வமணி தரப்பில் இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. கே பாக்யராஜ் அவர்கள் மீது தங்களுக்கு மரியாதை இருப்பதாகவும் அந்த மரியாதையை கெடுத்து கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் நான்கு வருடங்களுக்கு மேல் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருக்கும் பாக்யராஜ் எழுத்தாளர்களுக்கு ஓய்வூதியம் உட்பட எந்த வசதியும் செய்து கொடுக்காமல் இயக்குனர் சங்கத்தில் மட்டும் அந்த வாக்குறுதிகளை கொடுத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்ட இயக்குனர்களுக்கு மாதம் ரூபாய் 2000 ஓய்வூதியம் தருவதாக இருந்தால் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்றும், எனவே இது நடைமுறைக்கு ஒத்து வராத, செயல்படுத்த முடியாத வாக்குறுதி என்றும் செல்லமணி தரப்பினர் கூறியுள்ளனர்.

பதவிக்காக பாக்யராஜ் பொய் வாக்குறுதிகளை தந்து கொண்டிருப்பதாகவும் அவர் தனக்கு இருக்கிற மரியாதையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் செல்வமணி தரப்பினர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

'ஏதோ என்னால முடிஞ்சது: 'அரபிக்குத்து' பாட்டுக்கு ஷிவாங்கியின் டான்ஸ்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்; படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே .

செஸ் போட்டியில் உலகச் சாம்பியனையே வீழ்த்திய சென்னை சிறுவன்…. குவியும் பாராட்டு!

உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற மாஸ்டர் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் நார்வே நாட்டைச்

எலான் மஸ்க்கின் புதிய காதலி யார் தெரியுமா? வைரலாகும் தகவல்!

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மின்சார கார் உற்பத்தி பற்றிய தகவல்கள்

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 3 வேட்பாளர்கள் வெற்றி!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சிறையில் அடைப்பு: 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .