close
Choose your channels

அடுத்த வாரம் திருமணம் செய்யப்போகும் ஷங்கரின் மகள் புகைப்படம் வைரல்!

Monday, June 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்ததை பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த வாரம் பொள்ளாச்சியில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் மகனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த திருமணம் பொள்ளாச்சியில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு காரணமாக வெகு எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டால் சென்னையில் பிரமாண்டமாக வரவேற்பு வைக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் அடுத்த வாரம் திருமணம் செய்யப்போகும் ஷங்கரின் மகள் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.