இயக்குனர் ஷங்கர் மகளை திருமணம் செய்யப்போவது கிரிக்கெட் நட்சத்திரமா? வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,June 25 2021]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் ஜூன் 27ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த தகவலை பார்த்தோம். ஷங்கர் மகளை திருமணம் செய்யப் போகிறவர் மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகன் ரோஹித் என்று செய்திகள் வெளியானது.

ரோஹித் ஒரு கிரிக்கெட் வீரர் என்றும், இவர் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரோஹித்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இவர்தான் ஷங்கரின் மகளை திருமணம் செய்யப்போகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஷங்கர் மகளின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற இருப்பதாகவும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே இந்த திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.