மகளுடன் ரஜினியை சந்தித்த இயக்குனர் ஷங்கர்: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்குனர் ஷங்கர் தனது மகளுடன் சென்று பார்த்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் உருவான ’சிவாஜி’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இயக்குனர் ஷங்கர் தனது மகளுடன் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து பணி செய்தது தனக்கு மறக்கமுடியாத அனுபவம் என்று கூறினார். மேலும் இந்த சந்திப்பின்போது உங்களது ஆற்றல், பாசம் அனைத்தும் எனது நாட்களை இனிமை ஆக்கியது என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஜினியுடன் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

இந்த நிலையில் ’சிவாஜி’ படம் குறித்து கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

ஏவி.எம் நிறுவனத்தின்
பெரும் படைப்புகளுள் ஒன்று
ஷங்கர் இயக்க
ரஜினி நடித்த சிவாஜி

15ஆண்டுகளுக்குப் பிறகும்
பெயரைக் கேட்டாலே
சும்மா அதிருது

ஒவ்வொன்றிலும்
உச்சம் தொட்ட படம்

வாஜி வாஜி கேட்கும்போதே
சஹானா சாரல் தூவுகிறது

வாழ்த்துகிறேன்

More News

'தலைவர் 169' படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த ரெடின்கிங்ஸ்லே!

இயக்குனர் நெல்சன் படம் என்றாலே அந்த படத்தில் ரெடின்கிங்ஸ்லே இருப்பார் என்பதைச் சொல்லவே தேவையில்லை. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 169'

தனுஷின் எதிர்பார்ப்புக்குரிய படத்தின் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் நடித்த மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு போன் செய்தால் எங்க ஆள் தேடி வருவாங்க: கமல்ஹாசன் அறிக்கை

ரத்தம் தேவைப்படுபவர்கள் எங்கள் குழுவினர்களுக்கு செல்போனில் அழைத்தால் தேடி வந்து உதவி செய்வார்கள் என கமல்ஹாசன் அறிக்கை விட்டுள்ளார். உலக ரத்ததான தினத்தை முன்னிட்

பழைய 'விக்ரம்' படத்திற்கு சிவாஜி கணேசன் செய்த உதவி: பிரபல ஒளிப்பதிவாளர் தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் கடந்த 1986ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வித்தியாசமான

'இரவின் நிழல்' சிங்கிளை வெளியிடும் உதயநிதி: திமுக தொண்டனாக மாறிய பார்த்திபன்

பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவு நிழல்' என்ற திரைப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் ரிலீஸ் அறிவிப்பில் தான் திமுக தொண்டனாக மாறி விட்டதாக பார்த்திபன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.