'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தில் இவரா? சிம்புதேவனின் அடுத்த பட அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,July 14 2023]

வடிவேலு நடித்த ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ மற்றும் விஜய் நடித்த ’புலி’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சிம்பு தேவன். இவர் ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பும் சில நாட்கள் நடந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சிம்புதேவனின் அடுத்த திரைப்படத்தில் யோகி பாபு நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாகவும் வெங்கட் பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த படத்தை பிரபா பிரேம்குமார் தயாரிக்க உள்ளார். சிம்பு யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தில் இரண்டாம் பாகமா? அல்லது வேறு படமா? என்பது நாளை தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.