வெற்றி இயக்குனர் எஸ்பி முத்துராமன். பிறந்த நாள் பகிர்வு

  • IndiaGlitz, [Friday,April 07 2017]

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பிரபல நடிகர்களின் பல படங்களை இயக்கி கோலிவுட்டில் வெற்றி இயக்குனராக திகழ்ந்த எஸ்பி முத்துராமன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கோலிவுட் திரையுலகமே இந்த சாதனையாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் நம்முடைய உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

1935ஆம் ஆண்டு காரைக்குடி செட்டிநாடு குடும்பத்தில் பிறந்த எஸ்பி முத்துராமன், கடந்த 1972ஆம் ஆண்டு ஜெய்சங்கர், முத்துராமன் நடித்த 'கனிமுத்து பாப்பா' என்ற படத்தின் மூலம் இயக்குனரானார்.

கடந்த 1977ஆம் ஆண்டு வெளிவந்த 'புவனா ஒரு கேள்விக்குறி' படம்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கிய முதல் படம். அதன் பின்னர் ப்ரியா, ஆறில் இருந்து அறுபதுவரை, நேற்றிக்கண், புதுக்கவிதை, போக்கிரி ராஜா, ஸ்ரீராகவேந்தர், ராணுவ வீரன், குரு சிஷ்யன், வேலைக்காரன், பாண்டியன், தர்மத்தின் தலைவன் உள்பட 25 படங்கள் ரஜினியை வைத்து மட்டும் இயக்கியுள்ளார்.

அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'சகலகலா வல்லவன்', தூங்காதே தம்பி தூங்காதே, எனக்குள் ஒருவன், உயர்ந்த உள்ளம், ஜப்பானில் கல்யாணராமன், போன்ற படங்களை இயக்கியுள்ளார். எஸ்பி முத்துராமன் இயக்கிய கமல், ரஜினி படங்கள் பெரும்பாலானவை சூப்பர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிறந்த நாளில் அவர் நீண்டகாலம் வாழ்ந்து இளையதலைமுறை இயக்குனர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

More News

கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன். சூர்யா

பழம்பெரும் திரைப்பட இயக்குனர்களான கிருஷ்ணன்பஞ்சு அவர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏவிஎம் குமரன், சிவகுமார், சூர்யா, குட்டி பத்மினி, குகநாதன், விக்ரமன், கே.பாக்யராஜ், மகேந்திரன், பி.வாசு, சசி, எம்.என்.ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்...

'தல' பிறந்த நாளில் ரிலீஸ் ஆகும் அஜித்-ஷாலினி படம்

தல அஜித் பிறந்த நாள் வரும் மே 1ஆம் தேதி வரவுள்ள நிலையில் இந்த ஆண்டு அவருடைய பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் முன்னேற்பாடு செய்து வருகின்றனர். இப்பொழுது முதலே கவுண்ட்-டவுனை ஆரம்பித்துவிட்ட ரசிகர்கள் பல சமூக சேவைகள் மூலம் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை கொண்டாடி வருகின்றனர்...

அதிரடி ஆக்சன் காட்சிகளில் மீண்டும் த்ரிஷா

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தில் கமல்ஹாசனுடன் ஸ்டண்ட் காட்சி உள்பட அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்த த்ரிஷா, தற்போது 'கர்ஜனை' என்ற படத்திலும் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார்...

டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுத்த அடுத்த நாள் சரத்குமார் வீட்டில் ரெய்டு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தில் உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்...

ரசிகர்கள் வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்! விஷால் முக்கிய அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்ரல் 2ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பதவியேற்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஷால் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவுவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது...