விஜய்-அஜீத்-பவன்கல்யாண். சுசீந்திரனின் அடுத்த ஹீரோ யார்?

  • IndiaGlitz, [Wednesday,September 02 2015]

விஷால்-காஜல் அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'பாயும் புலி' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. 'பாண்டியநாடு' படத்தை அடுத்து மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி, விறுவிறுப்பான ஆக்சன் படமாக 'பாயும் புலி' படத்தை உருவாக்கியுள்ளதாகவும், படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் கண்டிப்பாக நல்ல ஒப்பனிங் இந்த படத்திற்கு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


'பாயும் புலி' சுசீந்திரனுக்கு எட்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சுசீந்திரன் இயக்கிய ஏழு படங்களில் 'ராஜபாட்டை' தவிர மற்ற அனைத்து படங்களும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுசீந்திரனின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. சுசீந்திரன் தனது அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்து வைத்துவிட்டதாகவும், இந்த படத்தில் விஜய், அஜீத் அல்லது பவன்கல்யாண் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என அவர் கருதுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சுசீந்திரனின் ஆசை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதனிடையே சுசீந்திரன் தயாரிப்பில் 'வில் அம்பு' என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், ஸ்ருஷ்டி டாங்கே உள்பட பலர் நடித்து வரும் இந்த படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

More News

ஹாலந்து செல்கிறது சூர்யா படக்குழு

'மாஸ்' படத்திற்கு பின்னர் சூர்யா, வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்து வரும் '24' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது....

நள்ளிரவில் படமாகும் 'தல 56' கிளைமாக்ஸ்

அஜீத் நடித்து வரும் 'தல56' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள மால் ஒன்றிலும்...

அறிமுக இயக்குனருடன் ரீ-எண்ட்ரி ஆகும் நமீதா

விஜய்யுடன் 'அழகிய தமிழ்மகன்', அஜீத்துடன் 'பில்லா' உள்பட பல படங்களில் நடித்து ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக...

'தல 56' படத்தின் வியாபாரம் தொடங்கியது

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது....

தனுஷின் இரண்டு படங்களை கைப்பற்றியது லைகா நிறுவனம்?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்துடன் தனுஷ் தயாரித்த 'நானும் ரெளடிதான்' ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...