ஜிவி பிரகாஷின் 'செல்பி' படம் குறித்து 'எச்சரிக்கை' விடுத்த இயக்குனர் தங்கர்பச்சான்!

  • IndiaGlitz, [Tuesday,March 29 2022]

ஜிவி பிரகாஷ் நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’செல்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து 'எச்சரிக்கை’ என்ற பெயரில் அறிக்கை ஒன்றை இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

எச்சரிக்கை!

கல்விக்கூடங்கள்‌ பணம்‌ கொள்ளையடிக்கும்‌ கூடங்களாக உருவாக்கப்பட்டப்பின்‌ தமிழ்‌ நாடு அதன்‌ கல்வியின்‌ தரத்தை இழந்து வருகின்றது. இந்த தனியார்‌ கல்விக்கூடங்கள்‌
எப்படிப்பட்ட தரகர்களை உருவாக்கி வைத்துள்ளது. இதில்‌ அப்பாவி பெற்றோர்களும்‌ மாணவர்களும்‌ தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்‌ எனும்‌ உண்மையை
நேர்த்தியாக பொருள்‌ உரைக்க பதிவு செய்வதுதான்‌ “செல்பி” திரைப்படம்‌.

மதிமாறன்‌ எனும்‌ புதிய இயக்குநரின்‌ ஆற்றலும்‌ திறமையும்‌ வியப்பில்‌ ஆழ்த்துகின்றன. அதேபோன்று குணாநிதி எனும்‌ அறிமுக நடிகரின்‌ இயல்பான மனம்‌ கவரும்‌ நடிப்பாற்றல்‌
நம்பிக்கை ஊட்டுகின்றன. ஜிவி பிரகாஷ்‌ முதன்மை பாத்திரத்தை தாங்கி நிற்கின்றார்‌! இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம்‌ அவரின்‌ திரைப்பயணத்தை மேலும்‌ விரிவுப்படுத்தும்‌!

முழு திரைக்கதையின்‌ மையப்புள்ளியான எதிர்‌ நாயகன்‌ பாத்திரத்தில்‌ கவுதம்‌ மேனன்‌ நடிப்புதான்‌ இத்திரைப்படத்தின்‌ கருவிற்கு மேலும்‌ வலுவூட்டுகின்றது. திரையில்‌ தோன்றும்‌ அனைத்து நடிகர்களும்‌ சிறு பிசகில்லாமல்‌ நடிப்பது ஒன்றே இயக்குநரின்‌ திறனை பறை சாற்றும்‌. கடலூர்‌ மாவட்ட வட்டார வழக்கு மிக சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களைக்‌ காப்பாற்றுவதாக கூறப்படும்‌ நான்கு தூண்களும்‌ அதன்‌ மீதான நம்பிக்கையினை இழந்து கொண்டிருக்கும்‌ நிலையில்‌ திரைப்படங்கள்‌ தான்‌ அரிதாக எப்பொழுதாவது சமூகத்தின்‌ சிக்கல்‌ சீர்கேடுகள்‌ குறித்து கேள்வி எழுப்புகின்றன. செல்பி அதனை திறம்பட செய்திருக்கின்றது. வெறும்‌ பணப்பைகளை நிரப்புவதற்காக மட்டுமே உருவாக்கப்படும்‌ திரைப்படங்களுக்கு இடையில்‌ இப்படைப்பின்‌ வரவு கவனத்துக்குறியது.

இவ்வாறு இயக்குனர் தங்கர்‌ பச்சான்‌ ’செல்பி’ திரைப்படம் குறித்து கூறியுள்ளார்.

More News

'செல்பி'யை அடுத்து ஏப்ரலில் ரிலீஸாகும் ஜிவி பிரகாஷின் இன்னொரு படம்!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த 'ஜெயில்' மற்றும் 'பேச்சிலர்' ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து சமீபத்தில் ரிலீசானது. இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி ஜிவி பிரகாஷ் நடிப்பில் மதிமாறன்

சொந்த அண்ணன் கையால் அவுட்டாகிய பரிதாபம்… ஐபிஎல் சுவாரசியங்கள்!

நேற்றைய ஐபிஎல் லீக் போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

'வலி எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி': யாஷிகாவின் வைரல் வீடியோ!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா தனக்கு காது குத்தும் வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் அதில் 'வலி எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி' என்று கேப்ஷன் பதிவு செய்து உள்ளார்.

5 வருடமாக நடத்தப்பட்ட சூட்டிங்… பிரம்மாண்ட திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட்!

பாலிவுட்டில் பிக்-பி என அழைக்கப்படும் நடிகர் அமிதாப்பச்சன்

பீச்சில் பிகினி, அரபிக்குத்து பாடலுக்கு செம ஆட்டம்: வேற லெவலில் பிரபலமாகும் 'பேச்சிலர் நாயகி!

ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' படத்தின் நாயகியான திவ்யபாரதி அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக வலம் வருகிறார். தினந்தோறும் அவர் பதிவு செய்யும்