இயக்குனர் திருமுருகன் அடுத்த சீரியல்.. அறிவிப்பிலே ஒரு ட்விஸ்ட்..!

  • IndiaGlitz, [Tuesday,April 16 2024]

திரைப்படம் மற்றும் சின்னத்திரை சீரியல் இயக்குனர் திருமுருகன் தனது அடுத்த ப்ராஜெக்ட் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அதிலும் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளது பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பரத் நடித்த ’எம்டன் மகன்’ ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திருமுருகன் பல சீரியல்களை இயக்கினார் என்பது தெரிந்தது.

குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ’மெட்டி ஒலி’ ’நாதஸ்வரம்’ ’தேன்நிலவு’ ’குலதெய்வம்’ ’கல்யாண வீடு’ ஆகிய சீரியல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் ’கல்யாண வீடு’ என்ற சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு முடிந்த நிலையில் அவரது அடுத்த சீரியல் குறித்த எந்த விதமான அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தில் அவர் ஒரு புதிய புரொஜக்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த புரொஜக்ட் எந்த டிவியிலும் ஒளிபரப்பாகாது என்றும் அவரது யூடியூப் சேனலில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

குடும்ப கதைகளை எதார்த்தமாக எளிமையான கேரக்டர்களை வைத்து மிகப்பெரிய வெற்றி சீரியல்களை இயக்கிய திருமுருகனின் அடுத்த ப்ராஜெக்ட் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

More News

ஷங்கர் மகள் திருமணத்தில் சங்கீதா விஜய்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியா?

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஓட்டு போட்றவன் எல்லாம் அரசியலுக்கு வர நினைச்சா, அப்புறம் எதுக்கு கட்சி? அமீரின் 'உயிர் தமிழுக்கு' டிரைலர்..!

அமீர் நடித்த 'உயிர் தமிழுக்கு' என்ற படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே இது ஒரு அரசியல் படம் என்பது தெரிய வருகிறது.

திடீரென பிரேமலதாவை சந்திக்க இருக்கும் தளபதி விஜய்.. என்ன காரணம்?

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை தளபதி விஜய் விரைவில் சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பு இன்னும் சில நாட்களில் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

'தக்லைஃப்' படத்தில் நடந்த தலைகீழ் மாற்றம்.. மறுபடியும் முதல்ல இருந்தா?

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்னம் இணைந்த 'தக்லைஃப்' படத்தில் திடீரென ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீக்கிரமே உலக அழகி பட்டத்தை வெல்வேன்-கருப்பு தமிழச்சி சான் ரேச்சல்

ரேச்சல் போன்ற பெண் பல தடைகளை உடைத்து எரிந்து வரும்போது இது போல பல பெண்கள் தனது வாழ்க்கை இலக்கை நோக்கி ஒரு படி முன் செல்ல நல்லதொரு உந்துதலாக இருக்கும்...