15 வருடங்களுக்கு முன் முதன்முதலில்... இயக்குனர் வெங்கட்பிரபுவின் மலரும் நினைவுகள்!

15 வருடங்களுக்கு முன் முதன்முதலாக தான் இயக்குனர் ஆகி ’ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்’ என்று கூறியதன் மலரும் நினைவுகளை இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த ’சென்னை 600028’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார். எஸ்பிபி சரண் தயாரித்த இந்த திரைப்படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் ’சென்னை 600028’ படத்திற்காக தான் முதன்முதலாக ’ஸ்டார்ட் கேமரா ஆக்சன்’ சொன்ன போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது மலரும் நினைவுகளாக பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

’சென்னை 600028’ வெற்றிக்கு பின்னர் இயக்குனர் வெங்கட்பிரபு, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது சிம்பு நடித்த ‘மாநாடு’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

நடிகை 'நல்லெண்ணெய்' சித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்

80களில் அறிமுகமாகி 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை சித்ரா. இவர் 'நல்லெண்ணெய்' விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றதால் இவருக்கு 'நல்லெண்ணெய்' சித்ரா என்ற பெயரில் சினிமா வட்டாரத்தில் ஏற்பட்டது. 

முன்னாள் ஆந்திர CMஉடன் சிவாஜி… “அண்ணாத்த“ பட நடிகர் பகிர்ந்த அரிய புகைப்படம்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் ஜெகபதி பாபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும்

பிங்க் பிகினிக்கு இத்தனை லட்சம் லைக்ஸா? பாலிவுட் நடிகையின் அல்ட்ராசிட்டி பிக்!

எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்

நீண்டகாலமா செக்ஸ் இல்லையா? விளைவுகள் குறித்து எச்சரிக்கும் ஆய்வு!

மனிதரைப் பொறுத்தவரைக்கும் செக்ஸ் என்பது இன்பமான ஒரு விசயம் என்பதைத் தாண்டி அது இரு மனங்களையும்

வொண்டர்வுமனை அறிமுகம் செய்த தமிழ் நடிகை: அப்படி என்ன செய்தார் தெரியுமா?

'காதலில் சொதப்புவது எப்படி' 'தீயா வேலை செய்யணும் குமாரு' உள்பட பல தமிழ் படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா மேனன், வொண்டர்வுமன் ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் செய்த சாதனை என்ன