'வடசென்னை 2' படம் எப்போது? இயக்குனர் வெற்றிமாறன் தகவல்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’வடசென்னை’ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் தங்களது அடுத்தடுத்த படங்களில் பிஸியானதால் இந்த படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் நேற்று தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது ’வடசென்னை 2’ படம் குறித்த கேள்வியை பலர் கேட்கின்றர்கள், தற்போது இயக்கி வரும் ’விடுதலை’ மற்றும் இந்த படத்தை அடுத்து இயக்க இருக்கும் சூர்யாவின் ’வாடிவாசல்’ ஆகிய படங்களை அடுத்து ’வடசென்னை 2’ படம் தொடங்கப்படும் என்று கூறினார்.

இதனை அடுத்து ’வடசென்னை 2’ திரைப்படம் விரைவில் உருவாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

More News

பழைய யுவன், புது யுவன் எல்லாம் கிடையாது, ஒரே யுவன் தான்: பாட்டு கேட்ட இயக்குனருக்கு பதில் சொன்ன யுவன்!

தன்னிடம் பாட்டு கேட்ட இயக்குனர் ஒருவரிடம் பழைய யுவன் எனக்கு வேண்டும் என்று கேட்டபோது பழைய யுவன், புது யுவன் என்று கிடையாது ஒரே ஒரு யுவன் தான் என்று யுவன் சங்கர் ராஜா

இயக்குனர் ஷங்கருக்கு சிறப்பு மரியாதை செய்யும் பிரபல தயாரிப்பாளர்: ஆகஸ்ட் 5ல் பிரமாண்ட விழா

பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு சிறப்பு மரியாதை செய்ய முடிவு செய்துள்ள பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், அதற்கான தேதியை ஆகஸ்ட் 5 என குறிப்பிட்டுள்ளார். 

மகளுக்கு திருமணம் முடித்த அருள் அண்ணாச்சி: உண்மையான வயது இவ்வளவா?

 'தி லெஜண்ட்' திரைப்படத்தில் நாயகனாக நடித்த சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சி இளமையாக திரைப்படத்தில் காணப்பட்டபோதிலும் அவருடைய உண்மையான வயது குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த பிரபல விஞ்ஞானி: புகைப்படம் எடுத்த பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பிரபல விஞ்ஞானி ஒருவர் சந்தித்த நிலையில் இந்த புகைப்படத்தை பிரபல திரைப்பட நடிகர் ஒருவர் எடுத்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது

10 நாள் ஆயிருச்சு நான் வேலையை ஆரம்பிச்சு: 'தளபதி 67' குறித்து லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 67' படம் குறித்த செய்திகள்