close
Choose your channels

'தல' இருந்திருந்தால் ஜெயித்திருக்கலாம்: விக்னேஷ் சிவன்

Monday, March 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் குவித்திருந்தும் ஆஸ்திரேலிய அணி 359 என்ற இலக்கை 47.5 ஓவர்களில் எட்டி, வெற்றி பெற்றது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

நேற்றைய தோல்விக்கு முக்கிய காரணமாக தல தோனிக்கு பதில் களமிறங்கிய ரிஷப் பண்ட், ஒரு கேட்ச் மற்றும் ஒரு எளிதான ஸ்டெம்பிங்கை மிஸ் செய்ததால்தான் என கூறப்படுகிறது. தல தோனி நேற்று விளையாடியிருந்தால் நிச்சயம் இந்தியா வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்

இந்த நிலையில் தல தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவராகிய இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேற்றைய போட்டி குறித்து குறிப்பிடுகையில் 'தலைவன் இருந்திருந்தா...என்று கூறி அதில் தோனி புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.