மறு திருமண செய்தி குறித்து இயக்குனர் விஜய் விளக்கம்

  • IndiaGlitz, [Friday,March 03 2017]

பிரபல இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலாபால் விவாகரத்து வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளிவந்து, இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் பல ஊடகங்களில் விஜய் மறு திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இன்னும் மனதளவில் விஜய்யை விரும்பும் அமலாபால் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தனது மறு திருமண செய்தி குறித்து இயக்குனர் விஜய் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

சமீப நாட்களாக, ஒரு சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்கின்ற ஜோடிக்கப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றது. இது போன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத செய்திகள் என்னை மேலும் மேலும் வருத்தப்பட வைக்கின்றது. என்னுடைய வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு ஆற்றி வரும் ஊடக நண்பர்களிடம், இது போன்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற தார்மீக உரிமை எனக்கு இருக்கின்றது என்று நினைக்கின்றேன். ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய கடமை. அதை முழு மனதோடு நிறைவேற்றுவேன்' என்று கூறியுள்ளார்.

More News

சினிமாவை பார்த்து யாரும் கெட்டு போவதில்லை. குஷ்பு

தமிழ் சினிமா, தமிழக அரசியல் என பிசியாக இருந்த குஷ்பு, சமீபத்தில் கேரளாவுக்கு சென்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக பேசிய பேச்சு கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. நடிகை பாவனா பாலியல் தொல்லை குறித்து பேசிய குஷ்பு, பாவனாவை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சி செī

100 ஆண்டு சினிமா வரலாற்றில் 'கபாலி' செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் ஓப்பனிங் வசூல், மொத்த வசூல் ஆகியவை தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வசூல். ஒருசிலர் இந்த படம் தோல்வி என்றும், இந்த படத்தால் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் என்று கூறி வந்தாலும் இதுவொரு மாபெரும் வ

பெப்சி-கோக் எதிர்ப்பு எதிரொலி. ஓட்ஸ் பக்கம் பார்வையை திருப்பும் வெளிநாட்டு நிறுவனங்கள்

பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்கள் குடிப்பதால் உடல்நலத்திற்கு தீங்கானது என்பதை கிட்டத்தட்ட இந்தியர்கள் பலர் புரிந்து கொண்டதால் அதன் விற்பனை பெருமளவு சரிந்துள்ளது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் தமிழகத்தில் சுத்தமாக பெப்சி, கோக் விற்பனை இல்லை என்றாகிவிட்டது...

அஜித் படத்தை திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவேன். பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் உள்பட பிற மொழி படங்கள் டப் செய்து கர்நாடகாவில் வெளியிட கன்னட திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ் படங்கள் வெளியிடும் திரையரங்குகள் முன் அவ்வப்போது ஆர்ப்பாட்டமும் நடந்தது உண்டு....

அஜித்-அக்சரா குறித்து ஸ்ருதிஹாசன் கூறியது என்ன?

அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் படக்குழுவினர் செய்து வருகின்றனர்...