இயக்குனர் விஜய்யின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,December 15 2017]

கடந்த ஆண்டு 'தேவி', இந்த ஆண்டு 'வனமகன்' ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் விஜய் தற்போது இயக்கி வரும் படம் 'கரு' என்பது தெரிந்ததே. இந்த படத்தை அவர் அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய முடிவு செய்து தற்போது ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார்.

'பிரேமம்' புகழ் சாய்பல்லவி நடித்துள்ள முதல் தமிழ்ப்படமான 'கரு' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்பல்லவி, நாகசெளரியா, ஆர்ஜே பாலாஜி, சந்தானபாரதி, ரேகா, நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபுதேவாவின் 'குலேபகாவலி' டிராக்-லிஸ்ட்

விஜய் இயக்கிய 'தேவி' வெற்றி படத்திற்கு பின்னர் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் 'குலேபகாவலி' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

இந்த கல்வி ஆண்டு முதல் 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து 10,11,12ஆம்

பயந்தது போலவே நடந்துவிட்டது: கார்த்தியிடம் பெரியபாண்டி மனைவி கண்ணீர்

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நிஜ தீரன் பெரியபாண்டியின் குடும்பத்தினர்களுக்கு நேரில் சென்று நடிகர் கார்த்தி ஆறுதல் கூறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நானாக இருந்திருந்தால் காலை உடைத்திருப்பேன்: விமான பாலியல் தொல்லை குறித்து பிரபல நடிகை

சமீபத்தில் அமீர்கானின் 'தங்கல்' படத்தில் நடித்த சைரா வாசிம் டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் பயணம் செய்தபோது தனக்கு பின்னால் உட்கார்ந்திருந்தவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அழுதுகொண்டே தனது

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் இன்னும் எனக்கு பயம் உள்ளது: சங்கர் மனைவி கவுசல்யா 

உடுமலையில் கவுசல்யாவின் கணவர்  படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சமீபத்தில் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை கிடைத்துள்ள நிலையில் சற்றுமுன் கவுசல்யா செய்தியாளர்களை சந்தித்தார்.