சென்னையில் கிளைமாக்ஸை படமாக்கும் இயக்குனர் விஜய்: ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,January 04 2022]

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விஜய் சமீபத்தில் இயக்கிய ’தலைவி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இந்த படம் வசூல் அளவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் விஜய் இயக்கும் அடுத்த படம் என்ன? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சென்னையில் படமாக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இயக்குனர் விஜய் தற்போது ஜீ5 ஓடிடிக்காக ஒரு வெப்தொடரை இயக்கி வருகிறார். இதில் ’பசங்க’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த ஸ்ரீராம் நாயகனாகவும், மேலும் பலரும் நடித்து வருகின்றனர். இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சியை சென்னையில் படமாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் விரைவில் இந்த தொடர் ஜி5 ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.