டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்த ஸ்பெஷல் வெப் சீரிஸ்.. 'லேபிள்'  மோஷன் போஸ்டர் ரிலீஸ்

  • IndiaGlitz, [Wednesday,October 11 2023]

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'லேபிள்' வெப் சீரிஸின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று, பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லேபிள்' சீரிஸின் முதல் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸுக்கு, திரைக்கதையை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுத்தில் உருவாகியுள்ள “லேபிள்” சீரிஸில், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜின் முதல் வெப் சீரிஸ் “லேபிள்” என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இதன் இசையை சாம் சி எஸ் கையாண்டுள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

More News

உன்னை ஆர்ட்டிஸ்ட்டா நினைச்சேன் பாரு, என்னை செருப்பால அடிக்கணும்.. நிக்சனுக்கு பதிலடி கொடுத்த ப்ரதீப்..!

நிக்சன் மற்றும் பிரதீப் இடையே மோதல் ஏற்பட்ட காட்சிகள் இன்றைய முதல் புரோமோவில் வெளியானது என்பதை பார்த்தோம். நிக்சன் ஆவேசமாக தனக்கு இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி இல்லை

அதர்வா அடுத்த படத்தில் 'சித்தா' நாயகி.. டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகர் அதர்வா நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதை சற்று முன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி

ரெண்டு பேரும் லவ்வரா? மணி-ரவீனாவிடம் ஓப்பனாகவே கேட்ட விசித்ரா.. ரவீனா கூறிய பதில்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்கும் மணி சந்திரா மற்றும் ரவீனா ஆகிய இருவரும் காதலர்கள் என்று ஏற்கனவே கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் தங்களது சமூக வலைதளங்களில்

ரஜினி, விஜய்யை அடுத்து கார்த்தி படத்திற்கு ஒரு தரமான சம்பவம்.. ரசிகர்கள் குஷி..!

ரஜினி, விஜய் போன்ற பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு மட்டுமே சென்னை நேரு ஸ்டேடியத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நிலையில் தற்போது கார்த்தி படத்திற்கு அதே நேரு ஸ்டேடியத்தில் இசை

உனக்கு வரலையா மூடிட்டு உட்காரு.. திடீரென ஆவேசமான நிக்சன்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர்