close
Choose your channels

மீண்டும் விவாகரத்துக் கொண்டாட்டம்… கடைசியில் கோர விபத்தில் முடிந்த சம்பவம்!

Monday, May 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபகாலமாகத் தங்களது பிடிக்காத திருமணங்களில் இருந்து விவாகரத்துப் பெறுவதைச் சிலர் கொண்டாட்டமாக எடுத்துக் கொள்கின்றனர். இப்படி கொண்டாடிய ஒரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான வகையில் விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை ஷாலினி தன்னுடைய விவாகரத்து நிகழ்வை போட்டோஷுட் எடுத்து கொண்டாடினார். இந்தச் சம்பவம் ஒருவகையில் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இது எல்லை மீறலாக இருக்கிறது எனப் பலரும் விமர்சித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது இதேபோன்று தன்னுடைய விவாகரத்தை கொண்டாடிய இளைஞரின் தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ரஃபேல் டோஸ் சாண்டோஸ் டோஸ்டா என்பவர் தனக்குப் பிடிக்காத வாழ்க்கையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் விவாகரத்துப் பெற்றுள்ளார். இதைக் கொண்டாட நினைத்த அவர் Bungee Jumping எனப்படும் உயரத்தில் இருந்து கயிறுகட்டிக் கொண்டு குதிக்கும் விளையாட்டை விளையாட நினைத்திருக்கிறார். ஆனால் இதை உரிய இடத்தில் செய்யாமல் ஒரு கைவிடப்பட்ட குவாரியில் மேற்கொண்டிருக்கிறார்.

விவாகரத்து பெற்ற மகிழ்ச்சியில் இருந்த ரஃபேல் 70 அடி உயரமுள்ள பழைய குவாரியில் இருந்து கயிறு கட்டிக்கொண்டு குதித்திருக்கிறார். ஆனால் அந்தக் கயிறு நடுவழியில் அறுந்து விழுந்திருக்கிறது. இதனால் கீழே இருந்த தண்ணீரில் மூழ்கிய அவரை நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்தினால் ரஃபேலின் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் கடும் எலும்புமுறிவு ஏற்பட்டு தற்போது படுத்த படுக்கையாகிவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ரஃபேல் சிறிய வயதில் அமைதியாக இருக்கும் நான் திருமணத்திற்குப் பிறகு எந்தக் காரியத்திலும் ஒரு அதீத முடிவை எடுக்க நினைத்தேன். அதன் விளைவாகத்தான் இப்படி படுக்கையில் கிடக்கிறேன் என்று கூறியுள்ளார். விவாகரத்துப் பெற்றதை கொண்டாடிய ரஃபேல் பற்றிய தகவல் தற்போது சமூகவலைத் தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.