close
Choose your channels

கிளாமரில் களமிறங்கிய செய்தி வாசிப்பாளர்: ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்ஸ்கள்!

Friday, May 7, 2021 • தமிழ் Comments

பொதுவாக சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பெரியதிரை நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் கவர்ச்சி கடலில் குதித்து லைக்ஸ்களை அள்ளுவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருக்கும் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள கிளாமர் புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன 

சன் நியூஸ், சன் டிவி மற்றும் தந்தி டிவி உள்பட சில செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்து வருபவர் திவ்யா துரைசாமி. இவரது செய்தி வாசிக்கும் ஸ்டைலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பாக இவர் நடத்தும் ’டென்ட் கொட்டா’ என்ற சினிமா ஷோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் திவ்யா துரைசாமி கடந்த சில நாட்களாகவே கவர்ச்சி கடலில் இறங்கி உள்ளார். குறிப்பாக தற்போது அவர் பதிவு செய்துள்ள சேலை காஸ்ட்யூமில் உள்ள கிளாமர் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நீங்களுமா கவர்ச்சி கவர்ச்சி போஸ் கொடுக்கிறீகள்? என்கிற ரீதியில் வேற லெவலில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றார்கள். இந்த கிளாமர் புகைப்படங்களை பார்க்கும் போது விரைவில் அவர் சினிமாவில் ஹீரோயின் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz