close
Choose your channels

சமூக வலைத்தள வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ் மகள்

Monday, February 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜ் ஆகிய இருவரும் கோலிவுட் திரையுலகில் பிசியாக நடித்து வரும் நிலையில் சத்யராஜின் மகள் திவ்யாவும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த செய்தியை திவ்யா சத்யராஜ் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நான் சினிமாவில் நடிக்கவுள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலில் உண்மை ஏதும் இல்லை. நான், சினிமாவில் நடிக்க விரும்பவும் இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மருத்துவராக பணியாற்றி வருகிறேன். மேலும் ஊட்டச்சத்து குறித்த பிஎச்.டி உயர் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.

சினிமா மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. நிறைய திரைப்படங்கள் பார்த்து ரசிப்பேன். இருப்பினும், படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஆனால் அது திரைப்படம் இல்லை'

இவ்வாறு திவ்யா சத்யாராஜ் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.