close
Choose your channels

பவர்பாண்டி'யை அடுத்து பிரபல நடிகரின் அடுத்த படத்தில் டிடி

Thursday, June 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சி புகழ் டிடி என்ற திவ்யதர்ஷினி அவ்வப்போது பெரிய திரையிலும் தலை காட்டி வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த 'பவர்பாண்டி' திரைப்படத்தில் டிடி தனது கேரக்டரை உள்வாங்கி மிக அபாரமாக நடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றார்
இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு பிரபல நடிகர், இயக்குனர் இணைந்த ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆம், கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் டிடி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
'துருவ நட்சத்திரம்' படத்தில் ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, சிம்ரன் உள்ளிட்ட பிரபல நடிகைகள் நடித்து வரும் நிலையில் தற்போது டிடியும் அவர்களுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.