close
Choose your channels

கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்த முக்கிய தகவல்

Sunday, September 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் நேற்று முன் தினம் இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை முன்னிட்டு தேமுதிக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது குறித்து ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல்நிலை சற்று சீராகியுள்ளதால் தற்போது அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னதாக விஜயகாந்த் உடல்நலம் குறித்து எந்த வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என அவரது மகன் வீடியோ ஒன்றில் உருக்கமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.