விஜயகாந்த் உடல்நிலை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு: கொரோனா குறித்தும் தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இருப்பினும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக தலைமை கழகம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தேமுதிக தலைவர் கேப்டன் அவர்கள் வழக்கமாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டதும் உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார் என்று தேமுதிக தலைமைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து விஜயகாந்த் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனாவா? மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்னை மாடல் அழகி: பரபரப்பு தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும்

இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் உடற்பயிற்சி புகைப்படங்கள்!

தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது 'தி ஃபேமிலி மேன்' என்ற வெப்தொடரில் நெகட்டிவ் வேடத்தில் நடித்து வருகிறார்

அக்சராஹாசனின் அடுத்த பட டீசரை வெளியிடும் ஸ்ருதிஹாசன்!

அக்சராஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை 'டிரண்ட் லவுட்' என்ற நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் இந்த படத்திற்கு 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

தோனியின் கேப்டன்சிக்கு வெறும் 4 மதிப்பெண்கள் தான்: பிரபல கிரிக்கெட் வீரர்!

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெரும் பரபரப்பாக இருந்தது என்பதும் இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது