பெண் பத்திரிகையாளர் தன்யாவுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு

  • IndiaGlitz, [Wednesday,August 09 2017]

பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் சமீபத்தில் விஜய் நடித்த 'சுறா' படத்தை எதிர்மறையாக விமர்சிக்கும் பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் தன்யா ஆபாச வார்த்தைகளால் தாக்கப்பட்டார்.
தன்யாவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஒருசிலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன்யா திமுக தலைவர் கருணாநிதி குறித்து பதிவு செய்த சர்ச்சைக்குரிய பதிவுகளை தோண்டி எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பினர். இதனால் தன்யாவை திமுகவினர் சிலர் திட்ட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன்யாவுக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், ' ஜனநாயக நாட்டில் வாழும் யாருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் உண்டு . அதற்கு எதிராக அவர்களை அவமானப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். எனவே அந்த பெண் பத்திரிக்கையாளருக்கு நியாயம் கிடைக்கவேண்டும்'' என்று பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் தன்யா கொடுத்த புகார் காரணமாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது

More News

ஹாலிவுட் நடிகையின் ஹேர் ஸ்டைலுக்கு மாறிய ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மன அழுத்தம் காரணமாக வெளியேறிய ஓவியா, கடந்த ஞாயிறு சென்னை சிட்டி செண்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.

சிம்புவின் அடுத்த படம் ஹாலிவுட் படமா?

சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை அடுத்து அவர் தற்போது ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி'யில் பிரச்சனை செய்யும் நடிகர் ஷாம்

இளையதலைமுறை நடிகர்களில் ஒரு படத்தின் கேரக்டருக்காக அதிக ரிஸ்க் எடுத்து மெனக்கிடும் நடிகர்களில் ஒருவர் ஷாம். அதிக உழைப்பை கொட்டி இவர் நடித்த '6' திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் ஷாமின் உழைப்புக்கு பாராட்டு கிடைத்தது.

துணை கலெக்டர் பதவியை ஏற்றார் பி.வி.சிந்து

கடந்த ஆண்டு நடைபெற்று ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் பி.வி.சிந்து.

தமிழின் பெருமையை உலகுக்கு கொண்டு செல்ல ஜி.வி.பிரகாஷின் முதல் முயற்சி

உலகில் உள்ள 1772 மொழிகளில் 7 மொழிகள் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. அந்த ஏழில் ஒன்று தமிழ் மொழி.