ஆளுனரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின். திடீர் திருப்பம் ஏற்படுமா?

  • IndiaGlitz, [Friday,February 10 2017]

தமிழக அரசியல் களம் இதுபோன்ற ஒரு பரபரப்பை இதற்கு முன் சந்தித்திருக்குமா? என்பது சந்தேகமே. தமிழகத்தில் அடுத்து ஆட்சியை அமைப்பது முதல்வர் ஓபிஎஸ் அவர்களா? சசிகலாவா? அல்லது குடியரசு தலைவர் ஆட்சியா? என்பதை அறிய கோடிக்கணக்கான தமிழக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை தமிழகம் வந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை சந்தித்தார். மேலும் இன்று காலை தலைமை செயலாளர், டிஜிபி உள்பட உயரதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று இரவு 7.30 மணிக்கு அவர் சந்திக்க உள்ளார். தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், அடுத்த ஆட்சி அமைவது குறித்தும் எதிர்க்கட்சி தலைவருடன் அவர் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஓபிஎஸ் உடம்பில் கை இருக்காது. மிரட்டும் அதிமுக நிர்வாகி

தமிழகத்தின் ஆட்சியை பிடிக்க போவது யார் என்று நடந்து கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு அரசியலில் வெற்றி பெறுவது முதல்வர் ஓபிஎஸ் அவர்களா? அல்லது சசிகலாவா? என்பது வெகுவிரைவில் தெரிந்துவிடும்...

ஈசிஆர் ரிசார்ட் செல்கிறாரா டிஜிபி?

தனக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் 130 பேர் ஆதரவுஇ கொடுத்திருப்பதாக நேற்று சசிகலா கவர்னரிடம் கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் அந்த 130 எம்.எல்.ஏக்கள் ஈசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட்டில் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது...

600-ல் ஹாட்ரிக். வரலாறு படைத்தது இந்திய கிரிக்கெட் அணி.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சற்று முன் வரை 163 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 660 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் விராத்கோஹ்லி 204 ரன்களும், முரளிவிஜய் 108 ரன்களும் எடுத்துள்ளனர்.

அமைச்சர் செல்லூர் ராஜூவை சிறை வைத்துள்ளரா சசிகலா? போலீசில் அதிர்ச்சி புகார்

அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் ஈசிஆரில் உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் சிறை வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைபிடித்து வைத்துள்ளதாக சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவினர்களும், தமிழக மக்களும் அதி

அதிமுகவில் இருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. மதுசூதனன்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த நிலையில் இன்று அவரை அவைத்தலைவர் பதவியில் இருந்து சசிகலா நீக்கியுள்ளார்.