இ.பி.எஸ் குறித்து ஆ.ராசா பேசிய சர்ச்சைப் பேச்சு… வலுக்கும் எதிர்ப்பு!

  • IndiaGlitz, [Saturday,March 27 2021]

திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா முதல்வர் இ.பி.எஸ் குறித்து ஆபாசமாக பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் களம் சூடு பிடித்து இருக்கிறது. இந்நிலையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களின் அதிரடியான சில விமர்சனங்கள் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையல் திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா முன்னாள் எம்.பி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்த கருத்துகள் தற்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், “பத்திரிக்கைகள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியை மிகப்பெரிய தலைவரைப் போல சித்தரிக்கிறார்கள். பொதுவாழ்வில் அவர் எட்டியிருக்கும் உயரம் ஒன்றும் இல்லை. நல்ல உறவில் நல்ல முறையில் பிறந்த ஆரோக்யமான குழந்தைதான் ஸ்டாலின் என்றால், கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைதான் எடப்பாடி பழனிசாமி” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.

ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் வெளியிடும் வகையில் சில பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தள கணக்குகளில் விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். திமுக எம்.பி கனிமொழி இந்த விவகாரம் குறித்து தன்னுடைய டிவிட்டர் பதிவில் “அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தித் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக் கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்” என்று பெயர் குறிப்பிடாமல் கண்டனம் வெளியிட்டு உள்ளார்.

அதேபோல காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் “தடைகளைத் தாண்டி தீவிர அரசியலில் ஈடுபடும் பெண்களை இழிவுபடுத்துவதும் ஆண்கள் எதிரெதிராக களம் காணும்போது கூட அவர்கள் வீட்டுப் பெண்களை இழிவுப்படுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. கண்ணியமான நேர்மையான அரசியல் என்பது பெண்களை மதிப்பதில் இருந்தே துவங்க முடியும். அதுதான் உண்மையான பெரியாரின் மண்” என்று பெயர் குறிப்பிடாமல் கண்டித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தடைகளைத் தாண்டி தீவிர அரசியலில் ஈடுபடும் பெண்களை இழிவுபடுத்துவதும், ஆண்கள் எதிரெதிராக களம்காணும்போது கூட அவர்கள் வீட்டுப் பெண்களை இழிவுபடுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. கண்ணியமான,நேர்மையான அரசியல் என்பது பெண்களை மதிப்பதில் இருந்தே துவங்கமுடியும். அதுதான் உண்மையான பெரியாரின் மண்.

— Jothimani (@jothims) March 26, 2021

அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.

இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்.

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 26, 2021