ஒரே நாளில் 2 எம்பிக்கள், ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: தமிழகத்தில் பரபரப்பு

தமிழகத்தில் ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று காலை சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி திமுக எம்பி மற்றும் எம்எல்ஏ ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி வெளிவந்துள்ளது

அதேபோல் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று ஒரே நாளில் காங்கிரஸ் எம்பி, திமுக எம்பி மற்றும் திமுக எம்.எல்.ஏ ஆகிய மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

தமிழ் சினிமாவின் இளம் ஹீரோவுக்கு பெண் குழந்தை: வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவரான நகுல் சமீபத்தில் தனது பிறந்த நாளன்று தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். விரைவில் தனது குடும்பத்தில் புது வரவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும்

ஐபிஎல் டி20 போட்டிக்களில் நேரத்தை மாற்றி புது அறிவிப்பு!!!

ஐபிஎல் டி20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்டிஸில் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை!!! பாதிப்பு யார் யாருக்கு???

நாளை (ஆகஸ்ட் 4) வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது.

2 நாட்களாக தொடர்ந்து பற்றியெறியும் காட்டுத் தீ… 20 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி அழிந்து நாசம்!!!

அமெரிக்காவின் கல்போர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி பகுதியில் உள்ள மலைகளில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய தொழில்நுட்பத்தால் குட்டிக்காடுகளை உருவாக்கி அசத்தும் சென்னை மாநகராட்சி!!!

மியாவாகி எனப்படும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காடு வளர்க்கும் முறைக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.