திமுகவில் சேர்ந்த பிரபல நடிகருக்கு கனிமொழி கண்டனம்

  • IndiaGlitz, [Saturday,March 04 2017]

சமீபத்தில் பிரபல நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான ராதாரவி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முன்பு திமுகவில் சேர்ந்தார். இனி ஸ்டாலின் தலைமையில் செயல்பட உள்ளதாகவும், தமிழகத்தை தற்போதைய சூழ்நிலையில் இருந்து காப்பாற்றுபவர் ஸ்டாலின் மட்டுமே என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராதாரவி அ.தி.மு.க-வில் இருந்தபோது, நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் ஆகியோர்களை மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு தற்போது சமூக வலைத்தள பயனாளிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக மகளிரணி தலைவியும், மாநிலங்களவை எம்பியுமான கனிமொழி மாற்றுத்திறனாளிகள் குறித்த ராதாரவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: ' ராதா ரவி அவர்கள் மாற்றுத்திறனாளிகளைப் பற்றி இகழ்ச்சியாக, ஏளனமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தலைவர் கலைஞரின் தொண்டர்கள் இதை ஏற்க மாட்டார்கள். உடல் கூறுகள் வேறுபட்டு இருப்பது ஒரு சிறிய தடைதான். மன ஊனம் தான் தாண்ட முடியாத தடை. மாற்றுத்திறனாளிகள் மனத்தடைகளை உடைத்தவர்கள்.' என்று கூறியுள்ளார்.

More News

சர்ச்சைக்குரிய புகைப்படங்களுக்கு சஞ்சிதா ஷெட்டி விளக்கம்

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் மற்றும் அவருடைய மொபைல் போன் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு அதில் பிரபல கோலிவுட் நட்சத்திரங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

என்ன நடக்கின்றது டுவிட்டரில்? கோலிவுட்டில் பரபரப்பு

கடந்த சில நாட்களாகவே பிரபல பாடகி ஒருவரின் டுவிட்டரில் சர்ச்சைக்குரிய தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவை பதிவாகி கோலிவுட்டின் ஒருசிலரை தூங்கவிடாமல் செய்துள்ளது.

சுசித்ரா விவகாரம். பிரபல பாடகி சின்மயி தன்னிலை விளக்கம்

பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தள பக்கம் கடந்த சில நாட்களாக ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு அதில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளிவந்து சர்ச்சைக்குள்ளாகி வருவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்னை தயவுசெய்து விட்டுவிடுங்கள். ஹேக்கர்களிடம் சுசித்ரா வேண்டுகோள்

பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தளத்தில் பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் எந்தெந்த சொத்துக்கள் பறிமுதல் ஆகும். நீதிமன்ற அதிகாரி விளக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட், சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. அதேபோல் இந்த வழக்கின் A1 குற்றவாளியான ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இருப்பினும் சிறப்பு நீதி