அடுத்த திமுக தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,August 21 2018]

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக என்னும் இயக்கத்தை தலைமையேற்று வழிநடத்தி வந்த திமுக தலைவர் கருணாநிதி இம்மாதம் 7ஆம் தேதி காலமானார். இதனையடுத்து திமுக தலைவர் பதவி காலியாக இருப்பதால் விரைவில் அப்பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் கூடுகிறது என்றும், அன்றைய தினத்தில் திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதன்படி இந்த இரண்டு பதவிகளுக்கும் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 26ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் 27ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற்று கொள்ளலாம் என்றும், வரும் 27ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் ரூ.25000 வேட்புமனு கட்டணம் கட்ட வேண்டும் என்றும், வேட்பாளர்களை ஐந்து பேர் முன்மொழியவும், ஐந்து பேர் வழிமொழியவும் வேண்டும் என்றும் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு கனிமொழியும் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

60 வயது மாநிறம்' சென்சார் மற்றும் ரன்னிங்  டைம் தகவல்கள்

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, இந்துஜா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '60 வயது மாநிறம்

'கனா' ஆடியோவை ரிலீஸ் செய்யும் கிரிக்கெட் பிரபலம்

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு திரைப்படமான 'கனா' படத்தின் ஆடியோ வரும் 23ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது

ஸ்ரீலீக்ஸ், தமிழ் லீக்ஸை அடுத்து வெளிவருகிறது 'ரெட்டி டைரி'

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலகினர் தனக்கு கொடுத்த பாலியல் தொல்லைகள் குறித்த குற்றச்சாட்டுக்களை

நிவாரண பொருட்களை தூக்கி எறியும் அமைச்சர்: நெட்டிசன்கள் ஆத்திரம்

கேரள மாநிலத்தை போலவே கர்நாடக மாநிலத்தின் பெரும்பகுதி தென்மேற்கு பருவமழையால் பெரும் பாதிப்பில் உள்ளநிலையில் அம்மாநில அரசும் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

கனவு நனவாகியது: ரஜினியின் அடுத்த படத்தில் த்ரிஷா

கோலிவுட் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வரும் மிகச்சில நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. கமல், அஜித், விஜய் உள்பட சீனியர் மற்றும் இளையதலைமுறை நடிகர்கள்